அடுத்தடுத்து அட்மிட்டான அக்ரி மாணவிகள்...... மாறி மாறி உடலில் பாய்ந்த விஷங்கள் | Thiruvannamalai

x

திருவண்ணாமலை மாவட்டம், கசப்பாக்கம் அருகே மேல் புதூர் கிராமத்தில், டிஜிட்டல் பயிர் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்ட தனியார் வேளாண் கல்லூரி மாணவி சங்கரியை பாம்பு கடித்துள்ளது. அவருக்கு பெரியகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், இதே கல்லூரியை சேர்ந்த குரு ராமலட்சுமி என்ற மற்றொரு மாணவி, சி. நம்மியந்தல் கிராமத்தில் பணிகளை மேற்கொண்ட போது, குளவி கொட்டியுள்ளது. இரு மாணவிகளும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், கல்லூரி தாளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்