"என்னையும் அடிச்சாரு..அவரையும் அடிச்சாரு"..வாயில்லா முதியவரை தாக்கிய எஸ்.ஐ.. SP எடுத்த அதிரடி முடிவு

x

திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரில் வசித்து வரும் குப்புசாமி - ராஜாமணி தம்பதி, முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். மதுப்பழக்கம் உடைய, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான குப்புசாமி, வந்தவாசியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னூர் காவல் உதவி ஆய்வாளர், குப்புசாமி மற்றும் ராஜாமணியை மது விற்பனை செய்வதாக கூறி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தாக்குதல் தொடர்பாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்