தி.மலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் பாலா நிதியுதவி
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நடிகர் கே.பி.ஒய் பாலா, ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார். திருவண்ணாமலை மலை மீது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தை நடிகர் கே.பி.ஒய் பாலா நேரில் பார்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ஒரு குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயை வழங்கினார்.
Next Story