ஆய்வுக்கு வந்த கலெக்டர்... திடீரென திரண்ட மக்கள் வெளியான கடும் எச்சரிக்கை

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு செண்பகத் தோப்பு அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அணையின் பாதுகாப்பு நலன் கருதி வினாடிக்கு 5,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அணையை ஆய்வு செய்தனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக அணையை வேடிக்கை பார்க்க வந்த நிலையில், அவர்களை மாவட்ட ஆட்சியர் அணை அருகே வரகூடாது கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து செண்பகத் தோப்பு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்