தி.மலை விரைந்த மத்திய குழு.. பார்த்ததும் அதிர்ந்துபோன அதிகாரிகள்

x

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால், கீழ்பென்னத்தூர் அடுத்த வேளானந்தல் கிராமத்தில் இருந்த விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. மேலும், வேலானந்தல் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. இவற்றை நேரில் பார்வையிட்ட மத்திய குழு, விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தது. இந்த ஆய்வின் போது ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்கள் மத்தியக்குழுவுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்