பூமிக்குள் புதைந்த 7 பேர்.. மண்ணிற்குள் சிறுவனை தேடி அலைந்த நாய் - கண்கலங்க வைக்கும் வீடியோ

x

திருவண்ணாமலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் வளர்ப்பு நாய், வீட்டில் இருந்தவர்களை மீட்பு பணியின் போது சுற்றி சுற்றி தேடியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராஜ்குமார், அவரது மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் கெளதம், நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், மீட்பு பணியின் போது வளர்ப்பு நாய் சுற்றி சுற்றி வீட்டிலிருந்தவர்களை தேடியது பார்ப்போரை கண்கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்