காலையில் அங்கன்வாடியை திறந்த ஊழியருக்கு அதிர்ச்சி.. குழந்தைகள் இருந்திருந்தால் உயிரே போயிருக்கும்..

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பூச்சு, மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதில் 30 குழந்தைகள் பயின்று வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. அங்கன்வாடிக்கு குழந்தைகள் வருவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இந்த சம்பவத்தால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைளின் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் தரமற்ற முறையில் அங்கன்வாடி மையத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்