உடல் முழுக்க வெட்டு.. பிணமான 19 வயது இளைஞர் - ஆதாரை பார்த்து அதிர்ந்த போலீஸ்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வெட்டு காயங்களுடன் 19 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இளைஞரின் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து, அவர் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story