`ரூ.300க்காக..' கடை முன்... ஊர் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்கள்... பரபரப்பு காட்சி
திருவள்ளூர் திருத்தணி நகராட்சியில் பிளாஸாடிக் பாட்டில் வியாபாரம் செய்யும் ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி அபராதம் செலுத்தாததால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கடை முன்பு கொட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் சாலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த நர்பத் என்பவர் கடையில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதால் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதை கட்ட தாமதமானதால் துர்நாற்றம் வீசும் குப்பைகளை கடை முன் கொட்டியுள்ளனர்... தொடர்ந்து அந்த 300 ரூபாய் அபராதத்தை நர்பத் செலுத்தியுள்ளார்... கடை முன்பு குப்பை கொட்டப்படும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story