பாலூட்டி சீராட்டி தோள் மேல் போட்டு வளர்த்த பேரன் இறந்ததும் உடைந்து அழுத தாத்தா | Thiruvallur
புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலயோகி நகரில் வசித்து வரும் தம்பதியர் பூபாலன் - சரிதா. இவர்களது மகன் டெண்டுல்கர் குமார் என்கிற வீரா 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வடமாநில நண்பர்கள் சிலரோடு மதியம் விளையாட சென்றுள்ளார். தொடர்ந்து மாணவர் வீடு திரும்பாத நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவனை தேடியபோது, அவரது வீட்டின் அருகே உள்ள தரைக் கிணற்றில் அவர் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாடியபோது மாணவன் தவறி கிணற்றில் விழுந்ததும், நீச்சல் தெரியாததால் அவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவன் உயிரிழந்ததை அடுத்து அவரது தாத்த கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.