துண்டு பிரசுரம்.. கிறிஸ்தவர்களின் வேனை சிறை பிடித்த பாஜகவினர் - சென்னை அருகே பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுமுகசாமி கோயில் அருகில் இந்துக்கள் வீடுகளுக்கு கிறிஸ்தவர்களாக மதம் மாற துண்டு பிரசுரங்கள் வழங்கிய சென்னை பெரம்பூர் கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் வந்த வேனை சிறை பிடித்து பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கிறிஸ்தவர்கள் "தாங்கள் செய்தது தவறு" என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
இந்த சம்பவம் திருத்தணி நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
Next Story