லிதுவேனிய காதலியை கரம் பிடித்த திருவள்ளூர் மாப்பிள்ளை

x

ஊத்துக் கோட்டையைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கதிரவன்- உமாமகேஸ்வரி தம்பதியின் மகன் தான் விலங்குகள் நல ஆர்வலர் சூரியகுமார்... தமிழ்நாட்டில் இளங்கலை பட்டம் படித்த இவர் முதுகலை படிக்க ஐரோப்பிய நாடான லிதுவேனியாவுக்கு சென்றுள்ளார்...

அங்கு அந்த நாட்டைச் சேர்ந்த பிரெஞ்ச் ஆசிரியரும் விலங்குகள் நல ஆர்வலருமான கமலே டெக்னிக்கைடுடன் காதல் மலர்ந்துள்ளது... இரு வீட்டார் சம்மதத்துடன் தனது லிதுவேனிய காதலியை அப்பெண்ணின் மதமான கிறிஸ்துவ முறைப்படி அங்கு திருமணம் நடந்தேறிய நிலையில், தமிழ் கலாச்சாரப்படி இன்று ஊத்துக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.,

இதில் சூர்யகுமாரின் உறவினர்கள், மற்றும் கமலே டெக்னிக்கைடின் தாய் மற்றும் தோழிகளும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்