10 ரூபாய் ஜூஸால் மீண்டும் நடந்த அதிர்ச்சி | thirupathur
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் பல்லி விழுந்த குளிர்பானத்தைக் குடித்த 2 பேர், உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்டிக்கடை ஒன்றில் மன்சூர், ரியாஸ் ஆகிய இருவரும் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானம் ஒன்றை வாங்கி சரிபாதி குடித்த நிலையில், அடியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இருவருக்கும் வயிற்று வலியுடன் குமட்டல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story