தவெக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - திருப்பத்தூரில் பரபரப்பு
நாட்றம்பள்ளி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்தை போலீசார் அகற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை, அடுத்த மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட நாயன செருவு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கிளை திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் அப்பகுதி திமுகவினருக்கும், தவெக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மேலும், பிரச்சினைக்கு காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அங்கிருந்து அகற்றினர். இதானல் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story