யூடியூப் வீடியோவை நம்பி நடுரோட்டில் முதியவர் செய்த செயல் - கேட்டதுமே அதிர்ந்த போலீசார்

x

திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் முகமது ஹசான். இவர், பேருந்து நிலையம் அருகே, ரூபாய் நாணயங்களை வருடங்களை வைத்து, 10 ஆயிரம் வழங்குவதாக விளம்பரப்படுத்தி இருந்தார். இதைப்பார்த்து ஆசைப்பட்ட பொதுமக்கள், தங்களிடம் இருந்த நாணயங்களை எடுத்துக்கொண்டு குவிந்தனர். ஆனால், ஆண்டு மற்றும் அதில் உள்ள அடையாளங்கள் இல்லை என குறைகளை கூறி, குறைந்த பணத்தை கொடுத்த‌தாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கூட்டம் கூடியதை பார்த்த போலீசார், அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். பின்னர், முகமது ஹசானை காவல்நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். பழைய ரூபாய் நாணயத்திற்கு, 5 லட்சம் முதல் 10 லட்சம் வழங்குவதாக யூடியூபில் வந்த வீடியோவை நம்பி, பொதுமக்களிடம் விலை கொடுத்து நாணயங்களை வாங்கியது தெரிய வந்த‌து. வீடியோ வெளியிட்ட நபரை தொடர்பு கொள்ளாமலேயே, அவரிடம் விற்பதற்காக நாணயங்களை விலைக்கு வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்