துணி மாற்றும் கேப்பில் நகையை திருடிய நபர்.. தலை தெறிக்க ஓடிய திருடன்... வெளியான பகீர் சிசிடிவி
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து செவிலியரின் 5 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சித்த மருத்துவ செவிலியராக பணியாற்றி வரும் ஜோதி, திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உடைமாற்றும் அறையில் தனது நகைகளை கழற்றி வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட நபர் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். மருத்துவமனையில் இருந்து ஒருவர் பையுடன் வேகமாக வெளியே ஓடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Next Story