திமுக எதிர்ப்பா? அதிமுகவோடு கூட்டணியா? - ஓப்பனாகவே சொல்லி மேடையை அதிரவிட்ட திருமா
மது ஒழிப்பு மாநாடு திமுகவை மிரட்டவோ, அதிமுகவோடு கூட்டணி வைக்கவோ இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சி என்றும் மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி எனவும் அவர் கூறினார். தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி குறித்து சிந்திப்பேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
Next Story