திடீரென திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட அபாய மாற்றம்..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு கடற்கரையில் 8 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிக அளவிலான கற்கள் உள்ளது. எனவே அந்த பகுதியில் பக்தர்கள் நீராட இயலாத சூழல் ஏற்பட்டது.
Next Story