திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..
திருச்செந்தூரில் 2வது நாளாக சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும் படி கோவில் கடற்கரை பணியாளர்கள் மற்றும் போலீசார் அறிவுறுத்தினர்..
Next Story