திருச்செந்தூர் கடல் காட்டிய அறிகுறி..! 2 பக்தர்களுக்கு நேர்ந்த கதி | Thiruchendur
திருச்செந்தூரில் அதிக மழை பெய்ததால், கடற்கரை மணல் முழுவதும் கடலில் அடித்து செல்லப்பட்டு, அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கடல் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடலில் நீராடிய பக்தர்கள் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு கடற்கரை பாதுகாப்பு பணியார்கள் உதவியுடன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலில் நீராடும் பக்தர்கள் விழிப்புணர்வோடு நீராட வேண்டும் எனவும், அதிக மழை பெய்யும் பொழுது கடலின் நீராடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Next Story