அரை கி.மீ. தூரத்திற்கு உள்வாங்கிய கடல்... எந்தவித அச்சமுமின்றி செல்பி எடுத்த மக்கள்

x

பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் உள்ள, கடல்பகுதி 50 அடி உள்வாங்கி காணப்படுகிறது. கடற்கரை நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள், கடற்பரப்பில் தெரியும் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி எந்தவித அச்சமுமின்றி செல்பி எடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்