பாகனை தூக்கி வீசி கொன்ற தெய்வானை - இதான் காரணமா? வெளியான புதிய திடுக் தகவல்
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன... கோவில் கண்காணிப்பாளர் வெங்கடேசன் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், இறந்த சிசுபாலன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் திருவனந்தபுரம் FCI இல் செக்யூரிட்டியாக வேலை செய்து வருவதாகவும், இறந்து போன உதயகுமார் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உதவி யானை பாகனாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
இறந்த இருவரும் அண்ணன் தம்பி உறவானவர்கள் என்றும், உதயகுமார் பணியில் இருந்த போது சிசுபாலன் யானை கட்டும் இடத்திற்கு வந்து யானை முன்பு நின்று புகைப்படம் எடுத்ததாகவும், அப்போது யானை துதிக்கையால் சிசுபாலனை பிடித்து சுவற்றில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... சிசுபாலனை காப்பாற்ற சென்ற உதயகுமாரையும் யானை துதிக்கையால் தூக்கி சுவற்றில் வீசிய நிலையில் இதில் முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த இருவரும் பலத்த காயமடைந்து பின் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரை அடுத்து, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.