அரசு பள்ளிக்கு மேள தாளத்தோடு வந்த சீர்வரிசைகள் - வியக்க வைத்த பெற்றோர்
அரசு பள்ளிக்கு மேல தாளத்தோடு வந்த சீர்வரிசைகள் - வியக்க வைத்த பெற்றோர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்த பாண்டியாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக வழங்கி பெற்றோர் அசத்தியுள்ளனர். பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், நாற்காலிகள், மேஜைகள், அலமாரி உள்ளிட்ட 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று பள்ளியில் ஒப்படைத்தனர். அரை நூற்றாண்டைக் கடந்து இயங்கி வரும் இந்த பள்ளியை மேம்படுத்தும் விதமாகவும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த சீர்வரிசையை பெற்றோர் வழங்கி உள்ளனர்.
Next Story