அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கிய அமைச்சர்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் ஓய்வு இல்லத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கணேசன், ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கினார். குற்றாலத்தில் அமைந்துள்ள திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்லம் ரூபாய் ஒரு கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. இதனை திறந்து வைத்து பேசிய அமைச்சர் கணேசன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருகையின் போது மட்டும் ஓய்வு கட்டடத்தை சுத்தமாக வைத்தால் போதாது எனவும், தினம்தோறும் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், கட்டிட ஓய்வு அறைகளை தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது எனவும், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் சரியாக பணியாற்ற வேண்டும் எனவும் அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
Next Story