கட்டுக்கட்டாக பணத்தை போட்டு கதறிய நரிக்குறவர் ஜோடி

x

தேனியில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க 25 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து குறவர் சமூகத்தை சேர்ந்த தம்பதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே 25 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், மேலும் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க சென்ற போது, அந்த வீடு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்