67ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த வைகை அணை - சிலிர்க்க வைக்கும் வரலாறு

x

தேனி மாவட்டத்தில் அடையாளமாக விளங்கும் வைகை அணை 67-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 1955-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி வைகை அணை கட்டுவதற்காக அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளில் அணை கட்டுமான பணிகள் முடிவுற்று 1959-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி அணை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை என 6 மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். இன்றளவும் உறுதித்தன்மை குறையாத அளவிற்கு பராமரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த வைகை அணை, 67-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்