``அழுகி கிடந்த மகன்''... கதறி துடித்து காரியம் முடித்த பெற்றோர் - திடீரென உயிருடன் வந்த மகன்...

x

கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி முருகேஸ்வரி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மணிகண்டன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது தந்தை தங்கமலை வேலைக்காக கும்பகோணம் சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தங்கமலையின் மனைவி செல்வம், கடமலைக்குண்டுவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி தங்கமலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது,

ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தனது மகன் இறந்து விட்டதாக செல்வம் கதறி அழுத நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பில் சந்தேகம் இல்லாதால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில்,

திடீரென தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு வந்த மணிகண்டன், தான் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததாக கூறினார். மணிகண்டன் உயிருடன் வந்ததால் வீட்டிற்குள் இறந்து கிடந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தது தங்கமலையா? என்பதை கண்டறிய அவரது உறவினர்களிடம் மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுப்பி உள்ளனர். இந்த முடிவுகள் வந்தால் தான் இறந்தது யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் தங்கம்மாள்புரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்