பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு
பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு
சோத்துப்பாறை அணையில் இருந்து, செந்நிறத்தில் வரும் நீரை, முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலையில், காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என, பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது செத்துப்பாறை அணை.
சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் அணைக்கு மேல்பகுதியில் உள்ள அகமலை மற்றும் கண்ணகரை பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் நிலச்சரிவால், அணை நீர் செம்மண் கலந்து செந்நிறமாக மாறியது. பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீரும், செம்மண் கலந்து செந்நிறத்தில் எடுக்கப்படுகிறது. இந்த நீரை பெரியகுளம் நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட போதிலும், நீர் செந்நிறமாகவே விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்று, நகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.