14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர்..! இரு தரப்பு குடும்பத்தினரை கைது செய்த போலீஸ்!

x

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நபர், 14 வயது சிறுமி ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுமி கர்ப்பமானதால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால், பெண்ணுக்கு 14 வயது என்பதால், ஒன்றிய விரிவாக்க அலுவலருக்கு மருத்துவமனை அலுவலர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் விசாரித்தபோது, இருவீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த‌து தெரிய வந்தது. இதையடுத்து, விரிவாக்க அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அவருடைய பெற்றோர், சிறுமியின் தாயார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை திருமணம் செய்ததாக கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்