பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மாசி திருவிழா - தேனியில் கோலாகலம்
தேனி மாவட்டம் சித்தார்பட்டியில் உள்ள ஸ்ரீ பொம்மையைசாமி கோவிலில் பாரம்பரிய முறைப்படி மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது, சுமார் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட இதில் செங் கரும்புகளுக்கு நடுவில் கொழுக்கட்டைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. படைக்கப்பட்ட படையல்கள் தம்புரான் மாடுகளுக்கும் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்காக காப்பு கட்டி விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக நின்று, குல சாமி மற்றும் தம்புரான் மாடுகளின் கால்களில் விழுந்து தரிசனம் பெற்று விரதத்தை முடித்தனர்.
Next Story