"எங்க போறது".. பஸ்ஸை சிறைபிடித்த கிராம மக்கள்.. தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டம் அகமலை கிராமத்தை காலி செய்ய மறுப்பு தெரிவித்து ஊர்மக்கள், அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை காலி செய்ய வனத்துறை கெடுபிடி காட்டுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து மனு அளித்தும் பலனில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என அகமலை கிராமமக்கள் வலியுறுத்தினர்.
Next Story