திருமணமான 9 மாதத்தில் மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன் - வெளியான அதிர்ச்சி காரணம்

x

தேனி அல்லிநகரம் ஹை ஸ்கூல் தெருவில் வசித்து வந்த லீலாவதி என்ற பெண் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட லீலாவதியின் மகள் கௌசல்யாவிற்கும் திண்டுக்கல் மாவட்டச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகிய நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவியை தன்னுடன் வாழ அனுமதிக்காததால் மாமியார் லீலாவதியுடன் மருமகன் பிச்சை முத்து தகராறு செய்து வந்ததாக கூறப்பட்டதால் பிச்சைமுத்துவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தாம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்