குறுக்கே பாய்ந்த நாய்...அடுத்த நொடியே பயங்கரம்... பிரிந்த உயிர்
தேனி மாவட்டம் பெரியகுளம் மீனாட்சியம்மன் படித்துறை சாலை வழியாக கல்லூரி மாணவர் ஷாஜகான் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தெருநாய்கள் சண்டையிட்டு கொண்டு வாகனத்தின் குறுக்கே பாய்ந்ததில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மாணவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள சூழலில், கடந்த 2 மாதங்களில் நாய்கள் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story