கோமா நிலை சென்று அப்படியே பிரிந்த மகன் உயிர்... கடைசியா ஹாஸ்பிடலில் சொன்ன வார்த்தை நெஞ்சில் பேரிடி

x

கோமா நிலை சென்று அப்படியே பிரிந்த மகன் உயிர்... கடைசியா ஹாஸ்பிடலில் சொன்ன வார்த்தை நெஞ்சில் பேரிடி

தேனியில், முறையான சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாகக்கூறி, தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த மடக்கருப்பு - பாண்டியம்மாள் தம்பதியினரின் மகன் மனோஜ் குமாருக்கு ஓராண்டுக்குமுன் திருமணமான நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு

மரத்திலிருந்து கீழே விழுந்ததில் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து தேனி என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

மனோஜ் குமார் கோமா நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் உடலை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாகவும் கூறி, மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்