சடலத்தில் இருந்த 4 சவரன் நகை.. திருடிய பெண்ணை.. தட்டி தூக்கிய போலீஸ்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் சடலத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். எஸ் எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த கமலம் என்ற மூதாட்டி, உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் சடலத்திலிருந்த தங்க சங்கிலி காணாமல் போன நிலையில், புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தங்க சங்கிலியை திருடிச் சென்ற வளையப்பட்டியை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
Next Story