கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்.. கலெக்டரிடம் கொடுத்த பரபரப்பு மனு

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை காலால் எட்டி உதைத்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அடுத்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிராம சபை கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட விவசாயி அம்மையப்பன், தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்