"பாம்பன் புதிய ரயில் பாலம் 100 % வலுவாக, பாதுகாப்பாக உள்ளது" - தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் உறுதி

x

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவு வரையில் புதிய பாம்பன் ரயில் பாலம் 535 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்ததும் பாலத்தில் ரயில்கள் இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. நவம்பரில் பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாலத்தில் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்த பிறகு ரயிலை முறைப்படி இயக்கலாம் என்றார். இதனையடுத்து குறைகளை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் ரயில்வேதுறை அதிகாரிகள் அங்கு செய்யப்பட்டிருக்கும் பணிகளை செய்தியாளர்களில் விளக்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே துணை பொது மேலாளர் சீனிவாசன், பாம்பன் புதிய ரயில் பாலம் 100 % வலுவாக, பாதுகாப்பாக உள்ளது என்றும் ஜனவரி முதல் வாரத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்