ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்.. ரம்மியமாக காட்சி தரும் திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை தொடர்வதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை எதிரொலியாக, கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், ஏராளமான ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் அருவியின் ரம்மியமான காட்சியை பார்த்து, குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்..
Next Story