பணத்திற்காக ஆட்டு வியாபாரியை கடத்தி சென்ற கும்பல்...கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஆட்டு வியாபாரியான இவர், கடந்த 27ம் தேதி ஆடுகளை விற்பனை செய்த இடத்தில் 25 லட்சம் ரூபாயை வசூல் செய்து வந்தபோது, ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். அவர்களிடம் இருந்து தப்பிவந்த சரவணன் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஓசூர் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா, நாகராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story