மகனின் திருமணத்தை பார்ப்பதற்குள் உயிரிழந்த தந்தை

x

மகனின் திருமணத்தை பார்ப்பதற்குள் உயிரிழந்திருக்கிறார் தந்தை.. இதனால் மனமுடைந்து போயிருந்த மகன், மண மேடையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய விதம் மனதை உலுக்கி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக..

மதுரை செல்லூர் பகுதியில் நடந்த திருமண விழாவில்தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம்...

காய்கறி சந்தையில் மூட்டை சுமந்து இரு மகன்களை ஆளாக்கிய தந்தை, மூத்த மகனின் திருமணத்தை பார்ப்பதற்குள் காலமானார்

தந்தையின் உருவத்தை மெழுகு சிலையில் உருவாக்கிய மகன்

இதனால் மனமுடைந்து போயிருந்த மகன்... என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா... மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா... என மனமுருகி... தந்தையின் உருவத்தை மெழுகுச் சிலையாக்கி, அச்சிலை முன் மனைவிக்கே தாலி கட்டியிருக்கிறார்..

ரூ.1.5 லட்ச சிலை முன் மனைவிக்கு தாலி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்

சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் தத்ரூபமாக தந்தையின் உருவத்தை மெழுகு சிலையில் கண்ட மகன், கண் கலங்கி தந்தையை அரவணைத்து முத்தமிட்டது கூடியிருந்தோரை உருக வைத்தது..

தந்தையின் சிலையின் அருகே தாயை நிற்க வைத்து, மனைவியுடன் சேர்ந்து மகன் ஆசி பெற்றதும் வீடியோவாக வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்