நடுக்காட்டில் கிடந்த இளம் பெண் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
முசிறி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தேவரப்பம்பட்டி வனப்பகுதியில், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். போலீசார் சென்று பார்த்தபோது, இளம்பெண்ணின் வாய் துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்ததோடு, வாய் மற்றும் கழுத்து பகுதிகளில் காயம் காணப்பட்டது. சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பெயர் பிரியங்கா என்பதும், ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டவர் என்பதும் தெரியவந்தது. இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story