வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் - கயிறு கட்டி மீட்கும் பரபரப்பு காட்சி

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கர்ணாவூர் கலிங்கல் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி சிறுவனை மீட்டனர்

கடந்த 30 ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவை சந்தித்தது இந்நிலையில் திண்டிவனத்தில் தொடர்ந்து இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பி கலிங்கல் வழியாக கர்ணாவூர் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த கருணாவூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான் அப்போது ஓடையில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் திடீரென வலிக்கு விழுந்து சுமார் அரைகிலோமீட்டருக்கு மேலாக ஓடையில் அடித்து செல்லப்பட்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த சிறுவனை கயிறு கட்டி சிறுவனை மீட்டனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்