ஆசையாக மகன் வாங்கிக்கொடுத்த சரக்கு..பூரித்த தந்தைக்கு ஷாக்..வெளியான அதிர்ச்சி வீடியோ | Villupuram

x

ஆசையாக மகன் வாங்கிக்கொடுத்த சரக்கு..பூரித்த தந்தைக்கு ஷாக்..வெளியான அதிர்ச்சி வீடியோ | Villupuram

#thanthitv #villupuram #tamilnadu #tasmac

விழுப்புரம் பிடாகம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் அவரது தந்தைக்காக மதுபானம் வாங்குவதற்காக ஜானகிபுரம் பாலம் கீழே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு தந்தைக்கு கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். பிறகு அவர் தந்தை இரவு மது பாட்டிலை பார்க்கும் போது உள்ளே ஏதோ மிதப்பது போன்று இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது மகனை தொடர்பு கொண்டு பாட்டில் உள்ளே ஸ்டிக்கர் மிதந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் இரவு வேலைக்கு சென்று விட்டதால் மறுநாள் வந்து மதுபான பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு வந்து கேட்ட போது அவர்கள் முதலில் இது இந்த கடையில் விற்பனை செய்தது அல்ல என்று சொல்லவே ஆத்திரமடைந்தவர் சரக்கு பாட்டிலை கொடுத்த விற்பனையாளரை அழைத்து கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து விடுங்கள் மேலும் இரண்டு சரக்கு பாட்டில்கள் தருகிறோம் என்று அவர்கள் கேட்டும் அவர் தராமல் இது குறித்து வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் முறையிட போவதாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். தந்தைக்காக மகன் டாஸ்மாக் மதுபான கடையில் கேள்வி கேட்ட சம்பவத்தால் டாஸ்மாக் கடையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்