"என்னை நைட் எல்லாம் அடிச்சு சித்ரவதை"..மொத்த ஊரையும் திரும்பி பார்க்க வைத்த பெண்..பரபரப்பு சம்பவம்

x

குடியாத்தம் அருகே முனிசிபல் லைன் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும்,

சென்னையை சேர்ந்த பொன்னி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் குடியாத்தத்தில் வசித்து வந்த நிலையில், நவீனின் குடும்பத்தினருக்கும், பொன்னிக்கும் தகராறு ஏற்பட்டு, இருவரும் சென்னையில் பொன்னி வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில், நவீன், பொன்னி இருவரும், குடியாத்தம் பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்தபோது, நவீனுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு திருமணம் செய்து வைப்பதாக, பொன்னியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னி மற்றும் அவரது குடும்பத்தினர், குடியாத்தம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்