வேளாங்கண்ணியில் பகீர் சம்பவம்.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்
வேளாங்கண்ணியில் பகீர் சம்பவம்.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ராஜேந்திரன் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் மேற்கூரையில் இரண்டு சிமெண்ட் ஷீட்டுகளை உடைத்துக் கொண்டு உருளை வடிவிலான மர்மப்பொருள் ஒன்று விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளிதார். அந்த மர்ம பொருள் காடா துணி சுற்றி பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதனை யாராவது வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story