அமித்ஷாவால் கிளம்பிய புயல் - தமிழகம் முழுவதும் ஆவேசத்துடன் திரண்ட விசிகவினர் - பரபரப்பு காட்சி

x

அம்பேத்கரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசிய அமித்ஷாவை கைது செய்ய கோரி சென்னை பூக்கடை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.


விடுதலை சிறுத்தை கட்சியினர்

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


அம்பேத்கர் குறித்து பேசியதை உள்துறை அமைச்சர் அமித்ஷா திரும்பப்பெற வலியுறுத்தி திருத்தணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்தகிரி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ரயில் இன்ஜின் மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

கரூரில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விசிகவினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்