"என்ன... மனுஷன் யா" - ஏழை மாணவருக்கு Laptop வழங்கி உதவிய - த.வெ.க நிர்வாகி

x

வேலூரில் லேப் டாப் இல்லாமல் சிரமமடைந்த பொறியியல் கல்லூரி ஏழை மாணவருக்கு தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நபர் லேப்டாப் வாங்கித் தந்து அவரது கல்விக்கு உதவியுள்ளது பாராட்டுகளைப் பெற்றுள்ளது... அடுக்கம்பாறை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலன் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் நிலையில், ப்ராஜெக்ட் மற்றும் படிப்பிற்காக லேப்டாப் இல்லாமல் சிரமம் அடைந்துள்ளார்... இது குறித்து தகவல் அறிந்த வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இம்தியாஸ் புதிய லேப்டாப்பை வழங்க முடிவு செய்தார். வேலூர் கட்சி அலுவலகத்திற்கு கபிலனை வரவழைத்து மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இம்தியாஸ் லேப்டாப் வழங்கினார். கபிலன் தனது கல்விக்கு உதவிய இம்தியாசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்