மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அரங்கேறிய கொடூரம்..ஓடும் ரயிலில் அதிர்ச்சி வீடியோ | Train

x

ஓடும் ரயிலில் ரயில்வே போலீசார் எனக் கூறி மாற்றுத்திறனாளியை குடிபோதையில் மூன்று பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்ற மாற்றுத்திறனாளி பயணம் செய்துள்ளார். நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் என கூறி ஏறிய மூன்று பேர், கதவை திறக்குமாறு திட்டியுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் யாரும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. திருவாரூரில் ரயில் நின்றபோது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவை திறந்ததும் உள்ளே சென்றவர்கள் மாற்றுத்திறனாளியான கருணாநிதியை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்