தி.நகரில் உள்வாங்கிய வீடு.. சென்னையின் நிலவியல் அமைப்பு தான் காரணமா? பகீர் தகவல்

x

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் தி நகர் பனகல் பார்க் வரையிலான மெட்ரோ சுரங்கம் தூண்டும் பணிகளின் போது அழுத்தம் காரணமாக ஒரு குறிப்பிட்ட வீடு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட வீடு மட்டும் இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான ஆய்வு மற்றும் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் முழுமையான முடிவு தெரிந்தவுடன் வீட்டின் நபர்கள் குடியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையின் நிலவியல் கடினமான பாறை மற்றும் இலகுவான மண் போன்றவற்றை கொண்டிருப்பதால் இது போன்ற சில நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மாம்பலம் இரண்டாவது தெருவில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் முழுமையாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபடும் என்றும் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து வீட்டின் சீரமைப்பு பணிகள் அதற்கான செலவுகளை மெட்ரோ ரயில் நிர்வாகமே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு பராமரிக்கும் வரை வீட்டின் உரிமையாளர்கள் குடியேறும் வீட்டிற்க்கான வாடகை மற்றும் இதர செலவுகளை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இருக்கும் மற்ற வீட்டார் அச்சப்பட தேவையில்லை மண்ணின் தரம் குறித்து ஏற்கனவே பரிசோதனை மேற்கொண்டாலும் தொடர்ந்து பலமுறை ஆய்வுகளை நடத்தி வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்வாங்கிய வீட்டின் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் மெட்ரோ நிர்வாகமே சரி செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்