கொட்டும் மழையில் அதிகாரிகள் செய்த செயல்..வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்

x

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில் தமிழரசி என்பவருக்கு சொந்தமான வீட்டில் குணசேகரன், அசோக், யாமினி தேவி ஆகிய 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். தமிழரசி வங்கி ஒன்றில் கடன் பெற்று முறையாக செலுத்தாததால் வீடு ஏலம் விடப்பட்டு மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் செங்குன்றம் பகுதியில், மழை கொட்டி வந்த சூழலில், வீட்டின் வாடகைதாரர்களை அவர்களது பொருட்களை கூட எடுக்க விடாமல் வங்கி நிர்வாகம் வருவாய், காவல்துறை உதவியுடன் வெளியேற்றி வீடுகளுக்கு சீல் வைத்தது. வீட்டில் வசித்து வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 22 பேரையும், அவர்களது உடைமைகளை கூட எடுக்க விடாமல் வலுகட்டாயமாக போலீஸ் உதவியுடன் அனைவரையும் வெளியேற்றி வீட்டிற்கு சீல் வைத்தனர். வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் அந்த வீட்டில் வசித்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக நோட்டீஸ் வழங்காமல் கொட்டும் மழையில் வீடுகளை விட்டு வெளியேற்றியதால் வாடகைதாரர்கள் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்